ரிஷி சுனக்கை சபிக்கும் பிரித்தானியர்கள்: ட்விட்டரில் வைரலாகும் விடயம்
பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதிலிருந்தே அவர் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகி வருகிறார்.
அவர் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்பதிலிருந்து, 200 ஆண்டுகளில் இவ்வளவு இளம் வயதில் பிரதமரான முதல்நபர் என்பது வரையில் பல்வேறு செய்திகள் கவனம் ஈர்த்துவருகின்றன.
இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே, அவர் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகி வருகிறார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக, ரிஷியை கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் வெளியாகியுள்ள ஒரு விடயம் வைரலாகியுள்ளது.
ஆம், #MildlyCurseRishiSunak என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
May you always fail the height requirement at theme parks.#MildlyCurseRishiSunak pic.twitter.com/inMZ2EE67P
— Steve Austins Burner (@steves__burner) October 30, 2022
அதில் பலரும் ரிஷியை கிண்டலாக சபித்துவருகிறார்கள்.
முக்கியமான ஒரு விடயத்தை வீடியோ எடுக்கும் நேரம் பார்த்து நீங்கள் ரெக்கார்ட் பொத்தானை அழுத்த தவறிவிடவேண்டும், தவறுதலாக சபாநாயகரை அம்மா என்று அழைத்துவிடவேண்டும் என்பது போல ரிஷியை மிதமாக சபிக்கும் ஹேஷ்டேக் அது.
May you lose your seat to Lord Buckethead at the next election #MildlyCurseRishiSunak pic.twitter.com/EqnkDzNKYH
— Eric Evans (@MrFunSponge) October 30, 2022
எப்போதுமே சூட்கேசை தூக்கிக்கொண்டு அலைபவர் என நீங்கள் அழைக்கப்படவேண்டும், பொதுக்கழிவறையில் இடம் கிடைக்காமல் கஷ்டப்படவேண்டும் என்றெல்லாம் சிலர் கிண்டல் செய்திருந்தாலும், சில சற்றே மோசமான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஆனால், இந்த விடயம் பிரித்தானியர்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளன ஊடகங்கள்!
May you forever be known as Briefcase W⚓#MildlyCurseRishiSunak pic.twitter.com/e1jg96HxSw
— Zowie (@SlipknotZowie) October 30, 2022