சகுனம் சரியில்லை... வீட்டுக்குள் செல்லமுடியாமல் வாசலில் தவித்து நின்ற பிரித்தானிய பிரதமர்
அரசுமுறைப் பயணமாக தன்னை சந்திக்கவந்த நாட்டின் தலைவர் ஒருவருடன், பிரதமர் வீட்டு வாசலில் ஊடகவியலாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, வீட்டின் கதவைத் திறக்கமுடியாததால் வீட்டு வசாலில் தவித்து நிற்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானார்.
வீட்டு வசாலில் திகைத்து நின்ற தலைவர்கள்
பிரித்தானியாவின் ருவாண்டா திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அரசுமுறைப்பயணமாக பிரித்தானியா வந்துள்ள நெதர்லாந்து பிரதமர் Mark Rutteஐ பிரதமர் இல்லத்துக்கு வரவேற்றார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
Tayfun Salci/ZUMA Press Wire/REX/Shutterstock
இருவருமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துமுடித்துவிட்டு, பிரதமர் வீட்டுக்குள் செல்ல முனைந்தனர். ஆனால், பிரதமரால் வீட்டின் கதவைத் திறக்கமுடியவில்லை.
கதவில் ஏதோ பிரச்சினை போலும், அது உள்பக்கமாக பூட்டிக்கொள்ள, யாராவது கதவைத் திறக்கவருவார்களா என இருவரும் வெகுநேரமாக காத்திருக்க, அசசௌகர்யமான ஒரு சூழல் அங்கு உருவாகியுள்ளது. பின்னர், வீட்டுக்குள்ளிருந்து யாரோ வந்து கதவைத் திறந்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
Tayfun Salci/ZUMA Press Wire/REX/Shutterstock
சகுனம் சரியில்லை
இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவ, லிபரல் டெமாக்ரட் கட்சியின் துணைத்தலைவரான Daisy Cooper, இது, பின்னால் நடக்கப்போவதற்கான முன்னடையாளம் என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு, ரிஷியையும், அவரது கன்சர்வேட்டிவ் கட்சியையும் பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றும் வாய்ப்பு வாக்காளர்களுக்குக் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |