பிரதமர் ரிஷி சுனக் 2024ல் தோல்வியடைவார்..!கருத்துக்கணிப்பு முடிவால் டோரிகள் அதிர்ச்சி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட மூத்த டோரி அமைச்சர்கள் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தங்களது இடங்களை இழக்கக்கூடும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆபத்தில் பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் 15 கேபினட் அமைச்சர்கள் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தங்கள் இடங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று புதிய வாக்குப்பதிவு தரவை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கை வெளிவந்துள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்திதாள்களுடன் பகிரப்பட்ட கருத்துக் கணிப்பு தகவலில், பிரதமர் ரிஷி சுனக், துணைப் பிரதமர் டொமினிக் ராப் மற்றும் சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே உட்பட டோரிகளின் மூத்த பிரமுகர்கள் 2024 இல் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் தோல்வியடையும் அபாயத்தில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
Getty Images
வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், வணிகச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ், காமன்ஸ் தலைவர் பென்னி மோர்டான்ட் மற்றும் சுற்றுச்சூழல் செயலர் தெரேஸ் காஃபி ஆகியோரும் தங்கள் இடங்களை இழக்க நேரிடும் என்று ஃபோகல்டேட்டா-வின் Best for Britain என்ற கருத்துக் கணிப்பின்படி தெரியவந்துள்ளது.
ஆனால் ஜெர்மி ஹன்ட், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன், மைக்கேல் கோவ், நாதிம் ஜவாவி மற்றும் கெமி படேனோக் ஆகிய ஐந்து கேபினட் அமைச்சர்கள் மட்டும் 2024 தேர்தலுக்கு பிறகும் தொடருவார்கள் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
தொழிலாளர் கட்சிக்கு வாய்ப்பு
தி இன்டிபென்டன்ட் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட புதிய பகுப்பாய்வுகள், சமீபத்திய தசாப்தங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கு தொடர்ந்து வாக்களித்த முக்கியமான 10 பெல்வெதர் இடங்களையும் தொழிலாளர் கட்சி(லேபர் கட்சி) கைப்பற்றும் போக்கில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
சுனக்கின் கட்சிக்கு மோசமான கருத்துக் கணிப்பு இருந்தபோதிலும், பெஸ்ட் ஃபார் பிரித்தானியாவின் பகுப்பாய்வு, டோரிகளை விட தொழிற்கட்சியின் மகத்தான முன்னிலை முன்பு நினைத்ததை விட மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
Illustration by Barry Falls