பிரித்தானிய பிரதமரின் மாமியார் பகிர்ந்த சுவாரசிய தகவல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி லண்டன் சென்றிருந்த போது தங்குமிடம் தொடர்பாக மருமகனின் விலாசத்தை தெரிவித்த போது அதை குடியேற்ற அதிகாரிகள் நம்ப மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்ற சுதா மூர்த்தி
இந்தியாவில் பிரபலமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா-வையே தற்போதைய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவியும், பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் தான் ஒரு முறை என்னுடைய மூத்த சகோதரியுடன் லண்டன் சென்ற போது, அந்த நாட்டின் குடியேற்ற அதிகாரிகள் என்னை எங்கு தங்க போகிறீர்கள் என்ற விவரத்தை எழுதி தரும்படி கேட்டார்.
என்னுடைய மகனும் லண்டனில் தான் தங்கி இருக்கிறார், ஆனால் அப்போது என்னுடைய மகனின் வீட்டு முகவரி சரியாக நினைவுக்கு வராத காரணத்தால், என்னுடைய மருமகன் ரிஷி சுனக்கின் முகவரியை “10 டவுனிங் ஸ்ட்ரீட்” என்று எழுதினேன்.
முகவரியை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
இதை பார்த்த குடியேற்ற அதிகாரிகள் என்ன காமெடி செய்கிறீர்களா என்று கேட்டார்கள், அதற்கு நான் உண்மை தான் என்று கூறியும், என்னுடைய எளிமையான தோற்றத்தை கண்டு அவர்களால் நான் தான் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பதை நம்ப முடியவில்லை. என்று தெரிவித்துள்ளார்.