விடை பெற்றார் ரிஷி சுனக்... அமெரிக்காவில் குடியேற திட்டமா?
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்றத்தில் விடைபெற்றுக்கொண்டார். விடை பெற்றார் ரிஷி சுனக்.
பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர், முதல் இந்து பிரதமர் என்னும் சிறப்புகளைப் பெற்ற ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி, கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்தது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை தற்காலிகத் தலைவராக பதவி வகித்துவந்தார் ரிஷி.
ஓரிரண்டு நாட்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுகப்பட உள்ள நிலையில், தீபாவளி நாளன்று தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் விடைகொடுத்துள்ளார் ரிஷி.
அமெரிக்காவில் குடியேற திட்டமா?
ரிஷி தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறக்கூடும் என தி கார்டியன் உட்பட பல பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பிரதமரின் கேள்வி நேரம் என்னும் நிகழ்ச்சியில், தான் கடைசி முறையாக கலந்துகொள்வதாக தெரிவித்த ரிஷியிடம், அவரது அமெரிக்கத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வேடிக்கையாக பதிலளித்த ரிஷி, பூமியின் தலைசிறந்த இடத்தில், திரைப்படம் போல் இயற்கைக் காட்சிகள் கொண்ட, சிறந்த மக்கள் வாழும் ஒரு இடத்தில் வாழப்போகிறேன். ஆம், நான் Yorkshireஇல்தான் இருப்பேன் என்றார் ரிஷி!