பிரித்தானிய பிரதமரான சில நாட்களிலேயே மக்கள் மனதை வென்ற ரிஷி சுனக்! ஆச்சரிய தகவல்
கருத்துக்கணிப்பில் கெயிரை முந்திய ரிஷி சுனக்.
பிரபலமானவர் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தகவல்.
பிரித்தானியாவில் சிறந்த பிரதமராக யார் இருப்பார் என்ற கருத்துக்கணிப்பில் எதிர்கட்சி தலைவரை முந்தி பிரதமர் ரிஷி சுனக் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமராக ரிஷி பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் இந்த கருத்துக்கணிப்பு Redfield மற்றும் Wilton மூலம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 39 சதவீதம் பேர் தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்ம்ரை விட ரிஷி சுனக் சிறந்த பிரதமராகவும், பிரபலமானவராகவும் இருப்பார் என கருத்து தெரிவித்துள்ளனர்.
38 சதவீதம் பேர் கெயிரை ஆதரித்துள்ளனர், வித்தியாசம் குறைவாக இருக்கும் போதிலும் ரிஷியின் பிரபல அதிகமாகியிருப்பதும், கெயிரின் பிரபலம் குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
IANS
பிரபலமானவர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் 891,000 க்கும் அதிகமான மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு மனுவில் கையெழுத்திட்டதன் மூலம் பொதுத் தேர்தலுக்கான அழைப்புகளும் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.
பிரித்தானியாவில் அடுத்த பொது தேர்தல் மே 2024ல் நடத்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.
நாடாளுமன்றச் சட்டம் 2011 இன் கீழ், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.