பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் செலுத்திய வருமான வரி: எழுந்த கடும் விமர்சனம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மில்லியன் கணக்கில் அதிகம் சம்பாதித்தாலும் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பணக்கார பிரதமராக
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடந்த நிதியாண்டில் 508,000 பவுண்டுகள் ($641,000) வரி செலுத்தியுள்ளார். தனது கடந்தகால நிதிச் சேவைகள் மற்றும் அவரது மனைவியின் குடும்ப சொத்து ஆகியவற்றின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்படுகிறார்.
Credit: uk parliament
கடந்த நிதியாண்டில் மட்டும் ரிஷி சுனக் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ள ரிஷி சுனக் அதனூடாக கடந்த ஆண்டு 1.8 மில்லியன் பவுண்டுகள் ஆதாயமடைந்துள்ளார்.
மேலும் வட்டி மற்றும் ஈவுத்தொகையாக சுமார் 293,407 பவுண்டுகள் பெற்றுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் என்பதால் சம்பளமாக 139,477 பவுண்டுகள் பெற்றுள்ளார்.
மக்கள் அதிர்ச்சியடைவார்கள்
மொத்தமாக 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கான வரியாக 22.8 சதவிகிதம் செலுத்தியுள்ளார். பிரித்தானியாவில் சராசரியாக 41,604 பவுண்டுகள் சம்பளம் பெறும் ஆசிரியர் ஒருவர் செலுத்தும் வரி விகிதத்தையே பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ரிஷி சுனக்கும் செலுத்துகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
Image Source :Rishi Sunak
மேலும், 37,000 சம்பளம் வாங்கும் செவிலியர் ஒருவரும் பிரித்தானியாவில் 21 சதவிகித வரி செலுத்துகிறார். இந்த நிலையில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும், பிரதமர் இவ்வளவு குறைந்த வரி செலுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றே நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |