பிரித்தானியாவில் அடிப்படை உணவு பொருட்களின் விலையை நிர்ணயிக்க பிரதமர் திட்டம்
பிரித்தானியாவில் அடிப்படை உணவு பொருட்களான பால் மற்றும் பிரட் போன்றவற்றின் விலையை, பிரதமர் குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை
பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து, மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்திருப்பதால், பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக பல்பொருள் அங்காடிகளிலும், மற்ற கடைகளிலும் உணவு பொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர், பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
@Shutterstock
இந்நிலையில் விநியோகதஸ்தர்கள் மற்றும் சில்லறை வணிக முதலாளிகள், பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். குடும்ப வரவு செலவு திட்டத்தின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதால் பல்பொருள் அங்காடிகள், அடிப்படை உணவு பொருட்களின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
விலையை குறைக்க திட்டம்
இதனை தொடர்ந்து பல்பொருள் அங்காடிகளில் விற்பனையாகும் அடிப்படை உணவு பொருட்களான, பால் மற்றும் பிரட் போன்றவற்றின் விலையை குறைக்க ரிஷி சுனக் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@mirror
மேலும் பல்பொருள் அங்காடிகளில் அடிப்படை உணவு பொருட்களின் விலையை குறைத்து, விற்பனை செய்ய வேண்டுமென ஒப்பந்தம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
தற்போதைய பணவீக்கம் மற்றும் கில்ட் விளைச்சல் அதிகரிப்பு ஆகியவை, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் தனிப்பட்ட வரிகளை குறைக்கும் பிரதமர் சுனக்கின் திட்டங்களை சீர்குலைப்பதாகக் கூறப்படுகிறது.
@mirror
இதனிடையே கடந்த ஏப்ரல் முதல் 12 மாதங்களில், பணவீக்கம் 8.7% ஆகக் குறைந்திருந்தாலும், விலைகள் மெதுவான விகிதத்தில் அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் இந்த வாரம் பொருளாதார நிலை குறித்து, பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.