இந்தியாவில் ரிஷி சுனக்... என்ன செய்கிறார் பாருங்கள்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், இந்தியாவுக்குச் சென்றுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ரிஷி சுனக்...
இந்தியர்களான ரிஷியின் தாத்தாவும் பாட்டியும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து, பின் 1960களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.
ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகள் ஆவார்.
ஆகவே, இந்திய வம்சாவளியினரான ரிஷி பிரித்தானிய பிரதமரானதும், தங்கள் வீட்டுப் பிள்ளையே பிரித்தானிய பிரதமராகிவிட்டதாக மகிழ்ந்தார்கள் இந்தியர்கள் பலர்.
ஆனால், இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் பலரைப்போலவே, ரிஷியும் பதவிக்கு வந்ததும் புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான் செயல்பட்டார்.
பின்னர், தேர்தல் வந்ததும், மீண்டும் அவருக்கு இந்தியர்கள் ஞாபகம் வந்தது.
மனைவியுடன் இந்திய கோவில்கள் பலவற்றுக்குச் சென்று வேண்டுதல் செய்தார். ஆனாலும், அடுத்த தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
No trip to Mumbai would be complete without a game of tennis ball cricket. pic.twitter.com/UNe6d96AFE
— Rishi Sunak (@RishiSunak) February 2, 2025
பதவியிழந்தபிறகு, நேற்று இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் ரிஷி.
இந்தியாவின் மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரிஷி, தான் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இப்படி டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடாவிட்டால் மும்பை பயணமே முழுமையடைவதில்லை என்று கூறியிருக்கிறார் ரிஷி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |