கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த ரிஷி சுனக்கின் மனைவி: அவசர அவசரமாக இந்திய அதிகாரிகள் செய்த செயல்...
இந்தியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமரின் மனைவி, கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்ததை திடீரென கவனித்துள்ளார்கள் அதிகாரிகள்.
நடுவரிசையில் அமர்ந்திருந்த அக்ஷதா மூர்த்தி
பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் தாயார், அதாவது இன்போசிஸ் நிறுவனர் NR நாராயணமூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்திக்கு, சமூக சேவைக்காக, பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
அந்த காட்சியைக் காண்பதற்காக, அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர்களுடன் அக்ஷதா மூர்த்தியும் நடுவரிசை ஒன்றில் உட்கார்ந்திருந்தார்.
அதிகாரிகள் செய்த செயல்
தற்செயலாக அதைக் கவனித்த அதிகாரிகள், அவசர அவரசமாக ரிஷியின் மனைவி அக்ஷதாவுக்கு முதல் வரிசையில் இடமளித்தனர்.
பிரித்தானிய பிரதமரின் மனைவி என்பதால், அக்ஷதாவுக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது.
அக்ஷதாவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கருக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால், அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள், நடு வரிசையிலேயேதான் தொடர்ந்து அமர்ந்திருந்தனர்.