இந்திய வம்சாவளி உள்துறைச்செயலர் பதவியைப் பறித்தார் பிரதமர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிவந்த பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன், தனது பதவியை இழந்தார்.
தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிவந்த உள்துறைச் செயலர்
சர்ச்சையின் மறுபெயரே சுவெல்லா என்று கூறும் அளவுக்கு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவந்தார் உள்துறைச் செயலரும் இந்திய வம்சாவளியினருமான சுவெல்லா பிரேவர்மேன்.
வீடற்றவர்கள் குறித்தும், பொலிசார் குறித்தும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களால் பிரித்தானிய அரசியல் வட்டாரம் கொந்தளித்தது. அவரை பிரதமர் ரிஷி பதவி நீக்கம் செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கின.
உள்துறைச்செயலர் பதவியைப் பறித்தார் பிரதமர்:
இந்நிலையில், சுவெல்லாவின் பதவியை பிரதமர் ரிஷி சுனக் பறித்துள்ளதாக பிபிசி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வளவு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து சுவெல்லா பேசிவரும் நிலையிலும், ரிஷி அவருக்கு ஆதரவளிக்கிறாரா என பல அரசியல்வாதிகள்கேள்வி எழுப்பிவந்தனர்.
பல தரப்பிலிருந்தும் சுவெல்லாவை பதவிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷிக்கு அழுத்தம் அதிகரித்துவந்தது. இந்நிலையில், நேற்று தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அலுவலகம் திரும்பிய ரிஷி, சுவெல்லாவை பதவிநீக்கம் செய்ததாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், கேபினட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.