அவளிடம் எனக்கு அந்த ஒரு விடயம் மட்டும் பிடிக்காது: மனைவி குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி
நாட்டை மட்டுமல்ல, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பிரித்தானிய பிரதமர் ரிஷிக்குதானாம். அத்துடன், என்னை விட ரிஷிக்குதான் சமையல் நன்றாக வரும் என்று ரிஷியின் மனைவி அக்ஷதா கூற, ரிஷியோ, எனக்கு அவளிடம் அந்த ஒரு விடயம்தான் பிடிக்காது என்கிறார்.
அவளிடம் எனக்கு அந்த ஒரு விடயம் மட்டும் பிடிக்காது
வீட்டில் எல்லா பொருட்களும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவேண்டும் என நினைப்பவர் ரிஷி. ஆனால், அவரது மனைவி அக்ஷதாவோ, காலையில் எழுந்ததும் இந்த போர்வைகளை மடித்துவைப்பதென்றாலே எனக்குப் பிடிக்காது என்கிறார்.
அக்ஷதா காலையில் எழுந்ததும் போர்வைகளை படுக்கையில் அப்படியே விட்டு விட்டுச் செல்ல, எனக்கு எரிச்சலாகிவிடும் என்கிறார் ரிஷி.
ரிஷியும் அக்ஷதாவும் Stanford பல்கலையில் படிக்கும்போது, அக்ஷதா படுக்கையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டை படுக்கையிலேயே விட்டு விட்டுச் சென்றுவிடுவாராம். அவளிடம் எனக்கு அந்த ஒரு விடயம் மட்டும்தான் பிடிக்காது என்கிறார் ரிஷி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |