பிரெக்சிட் வெற்றியைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கே மகிழ்ச்சியைக் கொடுக்கப்போகிறாராம் ரிஷி: எப்படி தெரியுமா?
பிரெக்சிட் வெற்றி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, அடுத்து, நாட்டுக்கே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைச் செய்யப்போகிறாராம்.
அது என்ன தெரியுமா?
ரிஷியின் வெற்றியாக பார்க்கப்படும் வட அயர்லாந்து பிரெக்சிட்
பிரித்தானிய பிரதமர் ரிஷி, பிரெக்சிட்டால் வட அயர்லாந்துக்கு ஏற்பட்ட கடுமையான பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யும் புதிய வட அயர்லாந்து பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சம்மதிக்க வைத்தது, பெரும் வெற்றியாக, சாதனையாக பார்க்கப்படுகிறது.
காரணம், பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அயர்லாந்துக் குடியரசு வழியாக மாமிசம் முதலான பல்வேறு பொருட்களை வட அயர்லாந்துக்குக் கொண்டு செல்ல முடியாததாலும், அங்கிருந்து பொருட்களை பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு எளிதாக கொண்டு வர முடியாததாலும், ’சாஸேஜ் போர்கள்’ என்றவொரு பதமே உருவாகும் அளவுக்கு பெரும் பிரச்சினைகள் உருவாகியிருந்தன.
Credit: Jack Hill/The Times, The Sunday Times.
தற்போது அந்த பிரச்சினை பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளதுடன், பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அமெரிக்க முதலீட்டுக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரிஷியின் இந்த ஒப்பந்தத்தைக் கொண்டாடுகிறார்கள்.
அடுத்து நாட்டுக்கே மகிழ்ச்சியை அளிக்கவிருக்கும் விடயம்
இந்நிலையில், பிரெக்சிட் வெற்றி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, அடுத்து பிரித்தானியாவுக்கே மகிழ்ச்சியை அளிக்கப்போகிறார் என்கிறார் அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர்.
Credit: Getty
அது என்ன தெரியுமா?
அது, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் கால் வைத்ததும், அவர்களைப் பிடித்து காவலில் அடைத்து, சில நாட்களுக்குள் ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடுகடத்துவதாகும்! இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை உடனடியாக நாடுகடத்துவதை சாத்தியமாக்கும் மசோதா தயாரானதும், அது நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும், அதன்பின் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்குள் நுழைவோர் இனி இங்கு தங்கமுடியாது.
இதுவே சரியானதும், பொறுப்பான விடயமுமாகும் என்று கூறியுள்ளார்.
இதைத்தான், நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.