உலக தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு
இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது பதிவில் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
@ALAMY STOCK PHOTO
ரிஷி சுனக் வாழ்த்து
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'புத்தாண்டு கொண்டாடும் நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு: புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை நான் விரும்புகிறேன்' என கூறியுள்ளார்.
முன்னதாக, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கிடம் தொலைபேசியில் உரையாடிய ரிஷி சுனக் உக்ரைன் பாதுகாப்பு தேவைகள், முன்னணியில் உள்ள நிலைமை, அதிகரித்த ஆதரவு மற்றும் திட்டமிடப்பட்ட சர்வதேச நிகழ்வுகள் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.