ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராவார்: பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னாள் பிரதமர் வாழ்த்து!
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒரு இந்திய வம்சாவளியினர் பிரித்தானியாவின் பிரதமராக வருவார் என பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் பகிரங்கமாக கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரித்தானியாவில் பொருளாதார குழப்பம் மற்றும் மந்தநிலை அச்சங்களுக்கு மத்தியில், ரிஷி சுனக் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25) நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
இதன்மூலம் பிரித்தானியாவில் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை ரிஷி பெற்றுள்ளார். மேலும், ஒரு வெள்ளையர் அல்லாத முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஆனால் முதல் பிரிட்டிஷ்-இந்திய பிரதமரின் நியமனம் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனால் கணிக்கப்பட்டது போல் தெரிகிறது.
போட்டியாளர் பென்னி மோர்டான்ட் டோரி எம்.பி.க்களிடமிருந்து போதுமான பரிந்துரைகளைப் பெறத் தவறி பின்வாங்கியபோது ஆளும் கன்சர்வேடிவ்களின் புதிய தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் (2010–2016) கேமரூன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சுனக்கை வாழ்த்தினார்.
Huge congratulations @RishiSunak on becoming PM to lead us through challenging times. I predicted a decade ago that @Conservatives would select our first Brit Indian PM & proud today that comes to be. I wish Rishi the v best, he has my wholehearted support https://t.co/yXLyo0hWTq
— David Cameron (@David_Cameron) October 24, 2022
அவர் தனது பதிவில் எழுதியதாவது: "மிகவும் சவாலான காலங்களில் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். நான் ஒரு தசாப்தத்திற்கு முன்பே கணித்திருந்தேன், பழமைவாதிகள் நமது முதல் பிரிட் இந்திய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று & இன்று அது நடந்துவிட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் ரிஷிக்கு சிறந்த வெற்றியை விரும்புகிறேன். எனது முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறேன்" என்று பதியைவிட்டுள்ளார்.
2012-ஆம் ஆண்டில், கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தொடக்க விழாவில் பேசிய கேமரூன்,பிரிட்டிஷ் இந்தியப் பிரதமரைக் கொண்டிருக்கும் முதல் கட்சியாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்று நினைக்கிறேன் என்று கூறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
"Prediction Becomes Reality."
— Sajid Yousuf Shah (@TheSkandar) October 25, 2022
Former British PM David Cameron Predicted in 2015 that there will be an Indian Origin PM in the UK. Now #RishiSunak is the Prime Minister.
Congratulations @RishiSunak ? pic.twitter.com/vjfPTbgEHz
இந்த வீடியோவில் அவர் ரிஷி சுனக், பிரீத்தி படேல் உள்ளிட்டோரை அவர் குறிப்பிட்டிருந்தார்.