பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்! தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுவதென்ன?
பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில், ஆளுங்கட்சியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Best for Britain சார்பாக நடத்திய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ்களை விட 19 புள்ளிகள் முன்னிலையுடன் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று சுட்டிக் காட்டுகிறது. இந்த கருத்துக்கணிப்பின் மூலம் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் ரிஷி சுனக் வெற்றி பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.
அதாவது, தொழிலாளர் கட்சி 468 இடங்களை பிடித்து வெற்றி பெறும் என்றும், நாளை தேர்தல் நடத்தப்பட்டால் சுனக்கின் கட்சி நாடு முழுவதும் 250 எம்.பிக்களை இழக்கும் என்றும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ்களுக்கு இதுவே மிக மோசமான முடிவாக இருக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |