மன்னர் சார்லசை சந்தித்த ரிஷி... மக்களைக் குழப்பிய புகைப்படம்!
மன்னர் சார்லசை ரிஷி சுனக் சந்திக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அது மக்களுக்கு ஒரு குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.
ரிஷி, மன்னரை விட சற்றே உயரம் குறைவானவர் ஆவார்.
பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் மன்னர் சார்லசை சந்திக்கும் புகைப்படம் மக்களுக்கு ஒரு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
ரிஷி, மன்னரை விட சற்றே உயரம் குறைவானவர் ஆவார்.
Image: via REUTERS
ஆனால், வெளியாகியுள்ள புகைப்படத்தில், மன்னரும் ரிஷியும் சம உயரமுடையவர்கள் போலத் தோன்றுவதைக் காணலாம்.
ரிஷியின் உயரம், 170 சென்றிமீற்றர், அதாவது, 5 அடி 6 அங்குலம் என கருதப்படுகிறது.ஆனால், மன்னருடைய உயரமோ 178 சென்றிமீற்றர், அதாவது, 5 அடி 10 அங்குலம்.
ஆக, ரிஷியைவிட மன்னர் 8 சென்றிமீற்றர் உயரம் அதிகம். ஆனால், வெளியாகியுள்ள புகைப்படத்தில் மன்னரும் ரிஷியும் சம உயரமாகக் காணப்படுவதால் சமூக ஊடகங்களில் தங்கள் வியப்பை வெளிப்படுத்திவருகிறார்கள் பிரித்தானியர்கள்.