அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வடக்கு அயர்லாந்தில் சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடனை, பிரதமர் ரிஷி சுனக் வடக்கு அயர்லாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாதான உடன்படிக்கை
புனித வெள்ளி சமாதான உடன்படிக்கையின் 25ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள, வடக்கு அயர்லாந்துக்கு வரும் ஜோ பைடனை(joe biden) பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(rishi sunak) சந்திக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
@ndtv
வடக்கு அயர்லாந்தில் அரசியல் நிச்சயம் அற்றதன்மை நிலை அதிகரித்துள்ள நேரத்தில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து எல்லைகளின் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிடுவதற்காக வரும் போது ஜோ பைடனை ரிஷி சுனக் வரவேற்கிறார்.
புனித வெள்ளி சமாதான உடன்படிக்கையின் 25ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் ரிஷி சுனக் வரும் புதன்கிழமை இரவு விருந்து நடத்தவுள்ளார். பிரதமரின் பயணத்திட்டத்தினை பிரித்தானிய அரசு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபருடன் பேச்சு வார்த்தை
புனித வெள்ளி ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 10, 1998 அன்று அமெரிக்க மற்றும் அயர்லாந்து நாடுகளிடையேயே தீர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் வடக்கு அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த விரோதப் போக்கை நிறுத்தியது.
தனது பூர்வகுடியான அயர்லாந்து நாட்டினை பற்றி அடிக்கடி பெருமையுடன் பேசும் ஜோ பைடன், அங்குள்ள குடியரசில் நேரத்தை செலவிடுவார், மேலும் அவர் தனது மூதாதையர்களது வீடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
@irishcentral
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் போது ஜோ பைடன் சில சமயங்களில் பிரித்தானிய அரசாங்கத்துடன் மோதியுள்ளார். ஆனால் சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட UK-EU ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
@Reuters
அந்த ஒப்பந்தம் இதுவரை வடக்கு அயர்லாந்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுக்க தவறியிருந்தாலும், ரிஷி சுனக் தனது ஆதரவை நிரூபிக்க முயல்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.
எனவே அமெரிக்க அதிபருடனான இந்த சந்திப்பு இரு நாடுகளிடையேயான நட்பு உறவை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.