பிரான்சில் அதிகரிக்கும் தொற்று - இன்று முதல் புதிய தடை அறிவிப்பு!
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் புதிய தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவித்தார்.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 45,000 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று முதல் (மார்ச் 26) நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Lyonஐ சுற்றியுள்ள Nièvre, the Aube மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களிலும் நான்கு வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரவில் உணவகங்கள், பார்கள், திரையரங்குகள் மற்றும் அருங்கட்சியாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் மருத்துவமனை அமைப்பு மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று Veran கூறியுள்ளார்.