அதிகரித்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை... ஸ்தம்பித்த பிரித்தானிய மருத்துவமனை ஒன்று
பிரித்தானியாவில் காய்ச்சல் பாதிப்புடன் பல எண்ணிக்கையிலானோர் மருத்துவமனையை நாடியதை அடுத்து லிவர்பூல் ராயல் மருத்துவமனை ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது.
லிவர்பூல் ராயல் மருத்துவமனை
அவசர நிலை ஏற்பட்டாலொழிய மருத்துவமனையை மக்கள் நாட வேண்டாம் என்றும் லிவர்பூல் ராயல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் தங்கள் பொது மருத்துவரை நாடவும் அல்லது 111 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சில நோயாளிகள் சுமார் 91 மணிநேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்தே, லிவர்பூல் ராயல் மருத்துவமனை புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதாவது நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதை அடுத்து, தங்களால் உரிய சிகிச்சையை முறையாக உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படும் போது அவசநிலையை அறிவிப்பார்கள்.
நான்கு மடங்காக
திடீரென்று காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் தொடர்பில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவை நாடியதை அடுத்தே, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் நாடுவோரின் எண்ணிக்கை NHS தரவுகளின்படி, கடந்த மாதத்தில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
இதனால், நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதால் சிலர் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவமனை எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |