சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் தொற்று: வெளிநாடுகளைக் கைகாட்டும் அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் தொற்று
சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 87 பேருக்கு மண்ணன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளைக் கைகாட்டும் அதிகாரிகள்
ஆனால், பெடரல் அதிகாரிகளோ, வெளிநாடுகளுக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்கள், அங்கிருந்து இந்த தொற்றை நாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக நம்புவதாகக் கூறுகிறார்கள்.
விடயம் என்னவென்றால், உண்மையாகவே உலக நாடுகள் பலவற்றில் மண்ணன் அல்லது measles பரவிவருகிறது. இந்த ஆண்டில் மண்ணன் தொற்று அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில், மண்ணன் தொற்று காரணமாக 136,000 உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |