உயரும் ரயில் கட்டணங்கள்... இங்கிலாந்தில் வாழ்பவர்களுக்கு மற்றொரு சுமை
இங்கிலாந்தில் ரயில் கட்டணங்கள் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்க உள்ளன.
எவ்வளவு அதிகரிப்பு, எப்போது?
இங்கிலாந்தில், சாதாரண ரயில் டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் என பலதரப்பட்ட ரயில் கட்டணங்கள் உயர இருக்கின்றன.
இந்த மாற்றம், 2024, மார்ச் மாதம், 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
ரயில் கட்டணங்கள், 4.9 சதவிகிதம் வரை உயர இருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் வாழ்பவர்களுக்கு மற்றொரு சுமை
ஏற்கனவே, ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம், அளவுக்கு மீறிய தாமதங்கள், ரத்துக்கள் என பல பிரச்சினைகளை சந்தித்துவரும் பில்லியன் கணக்கான பயணிகளுக்கு இது ஒரு கூடுதல் சுமை என லேபர் கட்சி விமர்சித்துள்ளது.
?BREAKING: The Tories have just announced another brutal bumper rise in rail fares.
— Louise Haigh (@LouHaigh) December 22, 2023
With passengers facing record delays and cancellations and delays, this is an insult to millions.
Labour will reform our broken railways and finally put passengers first. pic.twitter.com/8Dj8ISEf7g
அத்துடன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரயில்வே அமைப்பை சரி செய்வோம் என்றும், பயணிகளுக்கு முன்னுரிமை தருவோம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |