ரஷ்ய அணு ஆயுத தாக்குதல் அபாயம்: பிரான்ஸ் ஜனாதிபதியின் சர்ச்சை திட்டத்துக்கு எதிர்ப்பு
ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கும் நிலையில், ரஷ்யாவால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அணு ஆயுத அபாயத்தை எதிர்கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் திட்டம்
ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கும் நிலையில், ரஷ்ய தாக்குதலிலிருந்து ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அது என்னவென்றால், ஐரோப்பா கண்டம் முழுவதும் ஆங்காங்கே நீர்மூழ்கிக்கப்பல்களில் ஏவுகணைகளைத் தயாராக நிறுத்திவைப்பதாகும்.
ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக பிரான்ஸ் தன்னிடமிருக்கும் அணு ஆயுத ஏவுகணைகள் உட்பட, 300 ஏவுகணைகளை வழங்கத் தயாரான இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
மேக்ரானின் கருத்துக்கு பிரான்சிலிருந்தே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பிரான்ஸ் அரசியல்வாதிகளில் ஒருவரான François-Xavier Bellamy என்பவர், பிரான்சின் அணு ஆயுதங்கள், அதன் இறையாண்மையின் மைய விடயமாகும். அவற்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பகிர்ந்துகொள்ளும் மேக்ரானின் திட்டம், பிரான்சின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், பிரான்சையும் பிரித்தானியாவையும் விட ரஷ்யாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. சொல்லப்போனால், அமெரிக்காவிடமே ரஷ்யாவைவிட குறைவான அணு ஆயுதங்கள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |