டக் அவுட்டிலிருந்து ரோகித் தப்பிய பின் அவருடைய மனைவி கொடுத்த ரியாக்ஷன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டிலிருந்து ரோகித் சர்மா தப்பித்த பின் அவருடைய மனைவி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று துபாயில் நடந்த சூப்பர 12 போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷான் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், போல்ட் வீசிய 2.5 ஓவரில் இஷான் கிஷான் அவுட்டான உடன் இரண்டாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா, முதல் பந்தையே பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
எனினும், பந்து பவுண்டரிக்கு அருகிலிருந்து நியூசிலாந்து பீல்டர் Adam Milne கையில் போய் விழ, ஆனால் அவர் அந்த ஈஸி கேட்ச்சை தவறவிட்டார்.
இதைக்கண்ட ரோகிர் சர்மாவின் மனைவி Ritika Sajdeh, கைகளை வைத்து முகத்தை மறைத்த படி, கண்களை முடிக்கொண்டார்.
— pant shirt fc (@pant_fc) October 31, 2021
Adam Milne கேட்ச்சை தவறவிட்டவுடன் நிம்மதியடைந்த Ritika Sajdeh பெருமுச்சு விட்டார். Ritika Sajdeh-யின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது.