நீ சின்ன பையன், அப்படியே நடந்துகொள் என்றார்: உண்மையை கூறிய ரியான் பராக்
பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேலுடனான மோதல் குறித்த உண்மையை ரியான் பராக் கூறியுள்ளார்.
நடத்து முடிந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ரியான் பராக் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
எதிரணி வீரர்களிடம் வாக்குவாதம் செய்வது, நடுவர்களை கிண்டல் செய்வது என ரியான் பராக் நடந்துகொண்ட விதத்திற்கு சீனியர் வீரர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
ரியான் பராக்கிற்கு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வீரர் ஹர்சல் பட்டேல் உடன் களத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏனைய வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
Photo Credit: iplt20.com/BCCI
எனினும் போட்டி முடிந்ததும் ரியான் பராக் கை குலுக்க வந்தபோது ஹர்சல் பட்டேல் கண்டுகொள்ளாமல் சென்றார். இந்த நிலையில் ஹர்சலுடனான மோதல் குறித்து ரியான் பராக் மனம் திறந்துள்ளார்.
Photo Credit: Twitter
அவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் நான் ஆட்டமிழந்தேன். அப்போது அவர் என்னை உடைமாற்றும் அறை நோக்கி கைகாட்டியிருந்தார். ஆனால் களத்தில் நான் அதை கவனிக்கவில்லை.
பின்னர் ஓட்டலில் மறுஒளிபரப்பை பார்த்தபோது தான் எனக்கு அது தெரிந்தது. ஹர்சலின் செயல் என் மனதை பாதித்தது. இந்த நிலையில், இந்த சீசனில் மீண்டும் ஹர்சலை பார்த்தபோது அந்த விடயம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவரது பந்துவீச்சில் ரன் அடித்து விட்டு கடந்த ஆண்டு அவர் செய்தது போலவே செய்துகாட்டினேன். இதுதான் மோதலுக்கு காரணம்.
அந்த சமயம் என்னுடைய செயலைப் பார்த்து என்னிடம் வந்த முகமது சிராஜ், நீ சின்ன பையன், சின்ன பையன் மாதிரி நடந்துகொள் என்று கூறினார். ஆனால், போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கை குலுக்காமல் சென்றது எனக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தது' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Twitter