100வது போட்டியில் 45 பந்தில் 84 ரன்! IPL 2024யில் ருத்ர தாண்டவம் ஆடிய 22 வயது வீரர் (வீடியோ)
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அஸ்வின் சிக்ஸர் விளாசல்
ஜெய்ப்பூரில் நடந்து வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
*36-3*
— Rajasthan Royals (@rajasthanroyals) March 28, 2024
? Enter Riyan Parag:
pic.twitter.com/sjwlhyAHu6
ஜெய்ஸ்வால் 5 ஓட்டங்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகளை விரட்டினார். ஆனாலும் ஆமை வேகத்தில் ராஜஸ்தானின் ஸ்கோர் நகர்ந்தது.
சாம்சன் 15 ஓட்டங்களிலும், ஜோஸ் பட்லர் 11 ஓட்டங்களிலும் வெளியேறினார். இதனால் 7 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின், ரியான் பராக் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்ந்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்கள் குவித்தார்.
https://t.co/b25Pi3Z0SU pic.twitter.com/hLnVRxlfBw
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
100வது போட்டியில் வெற்றி
அதன் பின்னர் வந்த ஜூரெல் 20 (12) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியில் இறங்கிய ரியான் பராக் சிக்ஸர் விளாசி ருத்ர தாண்டவம் ஆடினார்.
கடைசி ஓவரில் வாணவேடிக்கை காட்டிய அவர் 45 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
278 ஓட்டங்கள் இலக்கை கடைசிவரை போராடி தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ்! மீண்டும் அடி வாங்கிய ஹர்திக் பாண்டியா படை
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் குவித்தது. பராக் தனது 100வது போட்டியில் தமது அணியை வெற்றி பெற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shaky start but a solid finish! ? pic.twitter.com/aZwgha5Paf
— Rajasthan Royals (@rajasthanroyals) March 28, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |