டி20 வரலாற்றில் ஜாம்பவான்கள் செய்யாத சாதனையை படைத்த 21 வயது இளம் வீரர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சையத் முஷ்தாக் அலி டிராபி 2023
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ரியான் பராக் (21).
இவர் தற்போது சையத் முஷ்தாக் அலி டிராபி 2023 தொடரில் அஸ்ஸாம் அணிக்காக விளையாடி வருகிறார்.
வரலாற்று சாதனை
அஸ்ஸாம் அணி 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ரியான் பராக் 6 ஆட்டங்களில் அரைசதம் விளாசியுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் 6 அரைசதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
BCCI
இதற்கு முன் டெவோன் கான்வே, விரேந்தர் சேவாக், பட்லர், கம்ரான் அக்மல், மசகட்சா, டேவிட் வார்னர் ஆகியோர் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |