தடை செய்யப்பட்ட சிகரெட்டை பயன்படுத்திய ரியான் பராக் - என்ன தண்டனை?
ரியான் பராக், ஐபிஎல் போட்டியின் போது தடை செய்யப்பட்ட மின்னணு சிகெரெட் புகைப்பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியான் பராக்
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருபவர் ரியான் பராக்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வீரர்களின் ஓய்வறையில் ரியான் பராக் செய்த சம்பவம் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துடுப்பாட்டம் ஆடும் போது,16வது ஓவரில் ரியான் பராக் ஓய்வறையில் மின்னணு சிகெரெட் புகைப்பிடிக்கும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன தண்டனை?
ஐபிஎல் விதிகளின் படி, குறிப்பிட்ட பகுதிகள் தவிர்த்து, உடைமாற்றும் அறை மற்றும் மைதானத்தின் பிற பகுதிகளில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
I thought vape smoke is banned in India!!! #PBKSvsRR #ipl @rajasthanroyals dressing room discipline. pic.twitter.com/Fi4r1GjQRX
— Anoop Nair (@tweetanoop) April 28, 2026
IPL விதிகளின் படி, 2.2-ன் கீழ் ரியான் பராக்கிற்கு அபராதம் முதல் சஸ்பெண்ட் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது வரை, ஐபிஎல் நிர்வாகம் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும், இந்தியாவில் மின்னணு சிகெரெட் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாடு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மீறுவது சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.
இதனால் ஐபிஎல் விதிகளையும் தாண்டி, ரியான் பராக் சட்டசிக்கலை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலாளர் ரோமி பிந்தர், டக் -அவுட்டில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியது விதிமீறலாகக் கருதப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |