கோஹ்லி வெற்றியைப் பறித்துவிட்டார்! முதல் அணியாக வெளியேறியது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்
நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம் என்று இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
வெளியேறிய பாகிஸ்தான்
துபாயில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 241 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சவுத் ஷகீல் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 42.3 ஓவரில் 244 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 56 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரிஸ்வான் கூறிய காரணம்
தோல்வி காரணமாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் முதல் அணியாக வெளியேறியது. அணித்தலைவர் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) தோல்வி குறித்து பேசுகையில்,
"நாங்கள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றோம், ஆனால் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 280 ஓட்டங்கள் நல்ல ஸ்கோர்ன்னு நினைத்தோம். மிடில் ஓவர்களில், அவர்களின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளினார்கள்" என்றார்.
மேலும் அவர், "தவறான, மோசமான ஷாட் தேர்வினால் நானும் சவுத் ஷகீலும் அதை ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் நேரம் எடுத்துக்கொண்டோம். அவர்கள் எங்களை மிகவும் அழுத்தத்தில் தள்ளினர். அதனால்தான் 240 ஓட்டங்களுக்குள் நசுக்கப்பட்டோம். தோற்கும்போதெல்லாம், எல்லா துறைகளிலும் நல்லா விளையாடவில்லை என்று அர்த்தம்.
ஆரம்பத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம், ஆனால் அவர்கள் எங்களை அதிகமாக தாக்கினார்கள். அவர்கள் மிகவும் நன்றாக விளையாடினார்கள். விராட் கோஹ்லியும், ஷுப்மன் கில்லும் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்.
நாங்கள் ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டும். இந்த போட்டியிலும், கடைசி போட்டியிலும் நிறைய தவறுகள் செய்தோம். அவர்கள் சரி செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |