வாணவேடிக்கை காட்டிய ரிஸ்வான்! கடைசி வரை போராடிய மொயீன் அலி.. லாகூரில் அதிரடி வெற்றி
அரைசதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகன் விருது பெற்றார்
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-2 என தொடரில் முன்னிலை வகிக்கிறது
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லாகூரில் நடந்த 5வது டி20 போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் அணி 145 ஓட்டங்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.
AP
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், வில்லே மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Getty Images
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 139 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
AP Photo
கடைசி வரை போராடிய கேப்டன் மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தார்.