வலியால் துடித்த ஆப்கான் வீரர்..ஓடிவந்து காலை பிடித்த ரிஸ்வான்..வைரல் வீடியோவுக்கு குவியும் பாராட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தசைபிடிப்பால் அவதிப்பட்ட வீரருக்கு, முகமது ரிஸ்வான் உதவிய வீடியோ பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி
சென்னையில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 8 ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா, மிரட்டலாக அவுட் ஆகாமல் 77 ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
இதற்கெல்லாம் நல்ல மனசு நல்ல மனிதர்கள் வேண்டும் ? pic.twitter.com/ZAz6M4pIVG
— #தமிழ்நாடு Stalin is more Dangerous than Karunanid (@Pugal0405gmail4) October 24, 2023
ஓடி வந்து உதவிய ரிஸ்வான்
ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்டத்தில் 37 ஓவர் முடிந்தபோது, ரஹ்மத் ஷாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அப்படியே கீழே படுத்தார்.
இதனை கவனித்த ரிஸ்வான் ஓடி வந்து அவரது காலினை பிடித்து physio உதவி புரிந்தார். அதன் பின்னர் களத்திற்கு விரைந்த பிசியோதெரபிஸ்ட் ரஹ்மத்தை கவனித்துக் கொண்டனர்.
வைரலாகும் வீடியோ
எதிரணி வீரருக்கு ஓடி வந்து உதவிய ரிஸ்வானை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஆப்கான் வீரர் குர்பாஸுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட் பரிசாக அளித்தது ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |