தென் ஆப்பிரிக்க வீரருடன் ரீல்ஸ் செய்த பெண் - இந்திய ரசிகர்களின் மோசமான செயல்
டேவிட் மில்லருடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு இந்திய ரசிகர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டேவிட் மில்லருடன் ரீல்ஸ்
கடந்த பிப்ரவரி 22 ஆம் திகதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

35 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்து, தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
போட்டி முடிவடைந்த பின்னர் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து டேவிட் மில்லருடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த RJ பிரின்சி பாரிக், நாம் நண்பர்கள் என நினைத்தேன் டேவிட் என பதிவிட்டு வீடியோவை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் மிரட்டல்
இந்திய அணியின் தோல்வியால் கடும் கோபத்தில் இருந்த ரசிகர்கள், டேவிட் மில்லருடன் வீடியோ வெளியிட்டதற்கு பிரின்சி பாரிக்கிற்கு வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பேஸ்புக்கிலிருந்து அந்த வீடியோவை நீக்கிய அவர், "தனக்கு "தொந்தரவு தரும் பாலியல் மிரட்டல்கள்" வந்ததாகவும், ரீல் வெளியான பிறகு உடல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது நான் காணாமல் போக வேண்டும் போலிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "மக்களும் அவர்களின் முதலாளிகளும் எந்த வகையான குற்றவாளிகளால் சூழப்பட்டுள்ளனர் என்பதை அறியும் வகையில், அவர்களின் பெயருடன் அவர்கள் அனுப்பிய செய்திகளை எனது ஸ்டோரியில் வெளியிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

பிரின்சி பாரிக் மிர்ச்சி லவ் நிகழ்ச்சியின் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக உள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |