ஜெனீவாவில் தொடரும் சாலை விபத்துக்கள்: முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், சாலை விபத்தொன்றில் முதியவர் ஒருவர் பலியான நிலையில், அவர், இந்த ஆண்டில் சாலை விபத்தில் பலியாகும் பத்தாவது நபர் ஆகிறார்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
ஜெனீவாவிலுள்ள Meyrin என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று நேற்று மதியம் விபத்துக்குள்ளானது.
அந்தக் காரை 79 வயது முதியவர் ஒருவர் செலுத்திக்கொண்டிருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் மீது பலமாக மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கார், வயல் ஒன்றில் போய் விழ, காரை ஓட்டிய முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
ஜெனீவாவில் சாலை விபத்துக்கள் தொடரும் நிலையில், நேற்று உயிரிழந்த அந்த முதியவர், இந்த ஆண்டு சாலை விபத்துக்களில் இறந்த பத்தாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

WRS
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |