கனடா முழுவதும் கவனம் ஈர்த்த காணொளி... பொலிசாரிடம் வசமாக சிக்கிய இந்திய இளைஞர்
ரொறன்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் கத்தியுடன் சண்டையிட்ட இந்திய இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
கத்தியுடன் மிரட்டல்
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ள நிலையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில்,
ஞாயிறன்று பகல் சுமார் 10.35 மணிக்கு டான்ஃபோர்ட் மற்றும் கென்னடி சாலையில் ஒருவர் கத்தியுடன் மிரட்டல் விடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பகுதியில் இருவர் ஆபத்தான வேகத்தில் வாகனம் செலுத்தியதாகவும், இதில் இன்னொரு சாரதி அவர்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திடீரென்று அந்த சாரதி கத்தியுடன் காரில் இருந்து இறங்கி, தாக்க முயன்றுள்ளார். இந்த காணொளியானது சமூக பக்கத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம் திடீரென்று வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு, ஒருவர் கத்தியுடன் வெளியே வருவதும், காணொளியாக பதிவு செய்யும் நபரை துரத்துவதும் பதிவாகியுள்ளது.
புகைப்படம் ஒன்றை வெளியிட்டு
இந்த நிலையில், அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த 21 வயது ரிஷப் பருவா என்பவரை ஞாயிறன்று இந்த சம்பவத்திற்கு பின்னர் கைது செய்துள்லதாக பொலிசார் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆயுதத்துடன் மிரட்டல் விடுத்தது, கத்தியால் தாக்க முயன்றது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பருவா உடன் காரில் அன்றைய தினம் பயணித்த நபர் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு 20 முதல் 30 வயதிருக்கலாம் என்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |