பாரீஸில் சாலைகள் மூடப்பட்டு வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட மக்கள்: பின்னணி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், சாலைகள் மூடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த விடயம் நடந்தது, வியாழக்கிழமையன்று...
எதற்காக இந்த நடவடிக்கை?
இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஏதோ குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக என்று எண்ணி விடவேண்டாம். கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இந்த நடவடிக்கை.
ஆம், டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் பாரீஸில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டு, பணியாளர்கள் மரங்கள் முதலான கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் பூச்சி மருந்துகளைத் தெளித்தார்கள்.
புலிக்கொசுக்கள்
புலிக்கொசு எனப்படும் ஒருவகை கொசு இந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.
அதன் அறிவியல் பெயர் Aedes albopictus. தற்போது, அது பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
உடல் முழுவதும் புலிகளைப் போல வரிகள் காணப்படுவதால் இந்த கொசுக்கள் புலிக்கொசுக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கொசுக்களின் பரவலின் பின்னணியிலும் புவி வெப்பமயமாதல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |