அந்த மனசு தான் சார் கடவுள்! திருட வந்த இடத்தில் ரூ.500-யை வைத்துச் சென்ற கொள்ளையர்கள்
திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் ரூ.500 நோட்டை விட்டுச் சென்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது.
ரூ.500 நோட்டை விட்டுச் சென்ற திருடர்கள்
இந்திய தலைநகரம் டெல்லியில் ரோகினி செக்டார் 8 இல் உள்ள 80 வயதான ஓய்வுபெற்ற பொறியாளர் எம்.ராமகிருஷ்ணா என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறாரார்.
அவர், ஜூலை 19 ஆம் திகதி மாலை, தனது மனைவியுடன் குருகிராமில் வசிக்கும் மகனைப் பார்க்கச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஜூலை 21ஆம் திகதி காலை, அவரது வீட்டில் திருட்டு நடப்பதாக அக்கம்பக்கத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக தனது வீட்டிற்கு சென்ற தம்பதிகள், பொருள்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
அதுமட்டுமில்லாமல், கதவின் அருகே பூட்டு உடைக்கப்பட்டிருந்தும், அதன் பக்கத்தில் ரூ.500 நோட்டு கிடப்பதையும் கண்டுள்ளனர்.
பொலீசார் வலைவீச்சு
ஜூலை 20 -21 ஆம் திகதி இடைப்பட்ட இரவில் நடந்த இந்த வினோத சம்பவம், வீட்டு உரிமையாளர் புகார் அளித்தபோது வெளிச்சத்திற்கு வந்தது.
அவர் தனது புகாரில்,"தனது வீட்டில் விலைமதிப்பற்ற பொருட்கள் எதையும் வைத்திருக்கவில்லை என்றும். எதுவும் திருடப்படவில்லை" என்றும் கூறினார். மேலும், வாசலுக்கு அருகில் ரூ.500 நோட்டு கிடந்துள்ளது என்றும் கூறினார்.
இதனையடுத்து, தம்பதிகள் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |