நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு! யார் என்று தெரிந்ததும் என்ன செய்தார்?
நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய பணிப்பெண் ஜிபே மூலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷோபனா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் பரதநாட்டிய கலைஞராகவும் இருந்தவர் நடிகை ஷோபனா.
இவர் பல திரைப்பலங்களுடன் 200 இற்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல், தாயாருடன் வசித்து வருவதாகவும், தாயாரை கவனித்துக்கொள்வதற்கு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த விஜயா என்பவரை பணிப்பெண்ணாக வைத்திருப்பதும் தெரியவந்தது.
இந்த சமயத்தில் இவரது வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு
அதாவது தாயிற்கு கொடுக்கும் பணம் திடீரென்று காணாமல் போவதால் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், பணிப்பெண் விஜயா தான் குற்றவாளி என்பதும், சுமார் 40,000 ரூபாய் வரை பணத்தை எடுத்து தனது மகளுக்கு GPay மூலம் அனுப்பியதும் தெரியவந்தது.
இதனையடுத்து புகாரை வாபஸ் பெற்ற நடிகை ஷோபனா, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்காமல், திருடிய பணத்திற்கு சம்பளம் இல்லாமல் வீட்டில் வேலை பார்த்தே கழிக்குமாறு எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |