லண்டனில் பெண்ணை தள்ளிவிட்டு அவர் தொண்டையை பிடித்த மர்மநபர்! பின்னர் செய்த செயல்.. புகைப்படங்களுடன் முழு தகவல்
லண்டன் இரயில் நிலையத்தில் பெண்ண்ணின் கழுத்தை பிடித்து பின்னர் அவரின் பொருளை திருடி சென்ற நபர் தொடர்பில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பெக்ஸ்லே இரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் கடந்த 8ஆம் திகதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது.
அன்றைய தினம் பெண் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த நிலையில் அவர் பின்னால் வந்த ஆண் அப்பெண்ணை சுவற்றை நோக்கி தள்ளிவிட்டான்.
பின்னர் அவரை தன்பக்கமாக திருப்பி வைத்து கழுத்தின் தொண்டை பகுதியாக கெட்டியாக தன் கையால் பிடித்தான்.
இதனால் பீதியடைந்த அப்பெண்ணின் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்தது. இதையடுத்து செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து அவன் தப்பியுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சில சிசிடிவி புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதில் உள்ள நபரிடம் சம்பவம் தொடர்பில் தகவல் இருக்கும் எனவும், விசாரணைக்கு அவர் உதவி தேவையாக இருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கருப்பு நிற உடையில் உள்ளதோடு, முகத்தில் மாஸ்க்கும் அணிந்திருக்கிறார். அவரை யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.