பிரித்தானியாவில் அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
பிரித்தானியாவில் அடுக்குமாடி வீட்டுக்குள் அதிகாலையில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
Watersedge, West Ewellல் தான் இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நடந்துள்ளது. அங்குள்ள அடுக்குமாடி வீட்டுக்குள் அதிகாலை 5.15 மணியளவில் புகுந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவலை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இரண்டு பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நபர் ஒருவர் வீல்சேரில் வைத்து ஏதோ ஒரு பொருளை தள்ளி கொண்டு போகிறார்.
அதில் இருக்கும் நபர் குறித்தோ அல்லது இச்சம்பவம் குறித்தோ தகவல் தெரிந்தவர்கள் உடனே தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.