2,350 மீற்றர் உயர மலையில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டி கொள்ளை: சுவிட்சர்லாந்தில் பரபரப்பு
சுவிட்சர்லாந்தில், 2,350 மீற்றர் உயர மலையில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டி ஒன்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2,350 மீற்றர் உயர மலையில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டி
சுவிட்சர்லாந்தின் Leukerbad என்னும் கிராமத்திற்கு மேல் அமைந்துள்ள Gemmi கணவாய்ப்பகுதியில், மலையேறுவதில் நிபுணர்கள் மட்டுமே எட்டக்கூடிய ஒரு இடத்தில் பணப்பெட்டி ஒன்றை வைத்துள்ளது, மலையேற்றக் குழு ஒன்று.
FACEBOOK/VIAFERRATA-LEUKERBAD.CH
தங்கள் குழுவுக்கு வருவாய் எதுவும் இல்லாத நிலையில், குழுவைப் பராமரிப்பதற்காக பெறப்பட்ட நன்கொடைகளை அந்தப் பெட்டியில் வைத்துள்ளனர் அந்தக் குழுவினர்.
தெளிவாக திட்டமிடப்பட்ட கொள்ளை
2,350 மீற்றர் உயர மலையில், கேபிள்கள் உதவியுடன் ஏறி, அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியை உடைத்து அந்த பணத்தை யாரோ எடுத்துச் சென்றுள்ளனர்.
FACEBOOK/VIAFERRATA-LEUKERBAD
அந்த பெட்டியை உடைப்பதற்கான கருவிகளையும் அந்த நபர்கள் கொண்டு சென்றுள்ளதைப் பார்க்கும்போது, இது ஏற்கனவே நன்றாக திட்டமிடப்பட்டுள்ள ஒரு விடயம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதற்கிடையில், பணத்தை இழந்த அந்த மலையேற்றக்குழுவினர் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், திருடப்பட்ட தொகையான 500 சுவிஸ் ஃப்ராங்குகளை அந்தக் குழுவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |