இளவரசர் வில்லியம் என்னை அந்த நிலையில் பார்த்தது சங்கடமான தருணம்: இளம் பிரபலம்
Robert irwin recall prince william saw him in ad: உள்ளாடையுடன் இருந்ததை இளவரசர் வில்லியம் பார்த்தது சங்கடமான தருணமாக இருந்ததாக, அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபர்ட் இர்வின் கூறியுள்ளார்.
ஒரு உள்ளாடை விளம்பரத்தில் இளவரசர் வில்லியம் தன்னை உள்ளாடையுடன் பார்த்த தருணம் சங்கடமாக இருந்ததாக, அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபர்ட் இர்வின் நினைவு கூர்ந்துள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ராபர்ட் இர்வின் என்ற 22 வயது இளைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இயற்கை ஆர்வலர், விலங்குக் காப்பாளர் பணியாளர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்ட பிரபலமாக உள்ளார்.

ராபர்ட் இர்வினும், பிரித்தானிய இளவரசர் வில்லியமும், நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் இணைந்து விலங்குகள் பாதுகாப்புத் திட்டங்களுக்காக நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த அரச குடும்பத்தினருடன் 'தி கிரஹாம் நார்டன் ஷோ' நிகழ்ச்சியில் ராபர்ட் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரையில் ராபர்ட் உள்ளாடையில் இருக்கும் படத்தைக் காட்டினார்.
அந்தப் புகைப்படங்களை வில்லியம் ஆய்வு செய்தபோது, ராபர்ட் வெளிப்டையாகவே முகம் சிவந்துள்ளார்.
நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை
இதுகுறித்த அனுபவம் பற்றி Extra TV-யில் ராபர்ட்டிடம் கேட்கப்பட்டது. அப்போது மீண்டும் முகம் சிவந்த அவர், "நான் அந்நிகழ்ச்சிக்கு அப்பாவித்தனமாக சென்றேன். பிரித்தானிய அரச குடும்பத்தினர் இதுவரை கலந்துகொண்ட முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன். எனவே, இது ஒரு வரலாற்றுத் தருணம் மற்றும் அதில் ஒரு பகுதியாக இருந்தது ஒரு உண்மையான கௌரவம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசுவதற்காகவே அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். நாங்கள் அங்கு இருந்தபோது, இளவரசர் வில்லியமும் கிரஹாம் நார்டனும் எனக்குப் பின்னால் ஏதோ திட்டமிட்டு, நான் ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடித்தபோது எடுத்த சில புகைப்படங்களைக் காட்டினார்கள் என்பது எனக்குத் தெரியாது" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 'இளவரசர் வில்லியமுடன் அந்த புகைப்படங்களைப் பார்ப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று; என் வாழ்க்கையிலேயே மிகவும் சங்கடமான தருணங்களில் இதுவும் ஒன்று' என்றார்.
