ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவிற்கு குழந்தை பிறந்தது.., என்ன குழந்தை தெரியுமா?
ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர்.
இதையடுத்து, சைட் ஆர்டிஸ்ட்டாக நடித்து வந்த ரோபோ ஷங்கர், ஹீரோவுடன் பயணிக்கும் விதமான முக்கிய குணசித்ர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடிக்க துவங்கினார்.
தனுஷின் மாரி, விஷ்ணு விஷாலின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், விஜய்யின் புலி, அஜித்தின் விசுவாசம் போன்ற படங்களில் பல படங்களில் நடித்தார்.
ஆரம்பத்தில் ரூ.100, ரூ.200 சம்பளமாக பெற்ற ரோபோ ஷங்கர், இன்று லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
ரோபோ ஷங்கர் மட்டும் இன்றி, இவருடைய மனைவி பிரியங்காவும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், யூடியூப் வீடியோவில் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அதுபோல், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் கார்த்திக், அதிதி ஷங்கர் நடித்த விருமன் படத்தில் இந்திரஜாவுக்கு காமெடி ரோலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து தான் மாமாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்திராஜாவின் கணவர் கார்த்தி, தொழிலதிபராக இருப்பது மட்டும் இன்றி, விரைவில் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இந்திரஜா கர்ப்பமானாதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்திராஜாவிற்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக கூறப்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |