உடம்பை குறைக்க எடுத்த டயட்! ஆபத்தாக முடிந்தது எப்படி? பல உண்மைகளை கூறிய ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் தனது உடல்எடை குறைந்தது குறித்த உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார்.
ரோபோ சங்கர்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது கொமடியின் மூலம் மக்கள் மனதில் குடிகொண்டவர் ரோபோ சங்கர், மிமிக்ரி கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை இவரை வெற்றி பெற வைத்தது இவரது பாடி லாக்குவேஜ் தான். ஆம் தனது கம்பீரமான உடம்பினால், ஆக்ஷனாலும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் வரை கவர்ந்திருந்தார்.
இந்நிலையில் இவரது புகைப்படம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக இருந்த ரோபோ சங்கரின் நிலை கவலையை ஏற்படுத்தியது.
எடை இழப்பிற்கு உண்மை காரணம்
இந்நிலையில் தற்போது உடல் எடை இழப்பிற்கான காரணத்தினை ரோபோ சங்கர் வெளியிட்டுள்ளார்.
அதாவது உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் மேற்கொண்ட ரோபோ சங்கருக்கு திடீரென மஞ்சள் காமாலை ஏற்பட்டுவிட்டதாம்.
இதன் காரணமாக எலும்பும் தோலுமாக மாறிய அவரை மருத்துவர்கள், குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொண்டதால் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் சிகிச்சையில் இருக்கும் போது, அதிகமான கொமடிகளைப் பார்த்து சிரித்து மகிழ்ந்ததாகவும், தான் இவ்வளவு விரைவில் குணமானதற்கு காரணம் கொமடிகள் தான் என்று கூறியுள்ளார்.
தன்னைப் பற்றி தவறாக காணொளி போடப்பட்டதையும் பார்த்தும் அதிகமாக சிரித்துக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நான் வெளியே செல்லும் போது என்னைப் பார்ப்பவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு நீங்கள் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக கூறுவது மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.