ஹன்சிகாவை கொச்சையாக பேசிய ரோபோ சங்கரை கிழித்து தொங்கவிட்ட ஊடவியலாளர்! வைரலாகும் காட்சி
நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்துக்கொண்ட நடிகர் ரேபோ சங்கர் நடிகை ஹன்சிகாவின் செயலை இழிவுப்படுத்தி பேசியுள்ளார். இந்த விடயமானது தற்போது இணையத்தில் வைராகி வருவதோடு, பலரும் ரேபோ சங்கரை விமர்சித்து வருகின்றார்கள்.
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.கடந்த ஆண்டு சொஹைல் கதூரியாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படமாக பார்ட்னர் படம் விளங்குகின்றது.
ரோபோ சங்கர்
விஜய் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ சங்கர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் வரிசையாக அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும் இவர் நோய்வாய்பட்டு உடல் மெலிந்து போனதை அடுத்து, ஹன்சிகா மற்றும் ஆதியுடன் சேர்ந்து பார்ட்னர் படத்தில் நடித்து வந்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகை ஹன்சிகாவை பற்றி ரோபோ சங்கர் கூறிய விடயமானது வைரலாகி வருகின்றது.
அவர் பேசியது என்ன?
ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார். ஹன்சிகா அவ்ளோ அழகு, அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருப்பாங்க.. உருட்டி வச்ச மைதா பொம்மை போல இருப்பாங்க. இவ்வாறு நடிகை ஹன்சிகாவை விமர்சித்து விட்டு, ஹன்சிகாவை இழிவுப்படுத்தும் வகையிலும் மேடையில் ஒரு விடயத்தை கூறியுள்ளார்.
பார்ட்னர் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை ரோபோ சங்கர் தொடுவது போன்று காட்சி இருந்துள்ளது.
அதை செய்வதற்கு நடிகை ஹன்சிகா சம்மதிக்கவில்லையாம். இயக்குனர் மற்றும் ரோபோசங்கர் காலில் விழுந்து கெஞ்சியும் அவர் அந்த காட்சியை எடுக்க சம்மதிக்கவில்லை என்று அவர் மேடையில் கூறியுள்ளார்.
ஹன்சிகா ஏன் வேண்டாம் என்று கூறினார்?
காமெடி நடிகர்கள் மற்றும் வேறுயாரும் தொடக்கூடாது. ஹிரோ மட்டும் தான் தொட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு பதிலடியாக தான், ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் தான் என்று தனது மன வருத்தத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்துள்ளார் ரோபோ சங்கர்.
மேலும் உடல்நல குறைவிற்கு பின்னரும் சினிமாவிற்கு வந்ததற்கு சந்தோஷப்பட்டாலும், இப்படி ஹன்சிகா நடிப்புக்கு கூட அவரை தொட விடவில்லை ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழும்பி வருகின்றார்கள்.
இது குறித்து பேசிய ஊடகவியலாளர்
@nila_kalam #TourDeFrance #trending ♬ Silent Alert (feat. AutoSilent Disable Sound Mode Silence Enable Stay Silent Phone Ring Song Set on Vibrate Only No App Turn Off) - Mute Switch Broken