ஜேர்மன் மருத்துவமனையில் 3,000 பேருக்கு உணவு தயாரிக்கும் ரோபோ
ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில், ரோபோ ஒன்று 120க்கும் அதிகமான வகை உணவுகளை சமைத்து அசத்துகிறது.
உணவு தயாரிக்கும் ரோபோ
மனிதர்களின் உதவி இல்லாமலே, நாளொன்றிற்கு 3,000 பேருக்கு உணவு தயாரிக்கிறது அந்த ரோபோ.
மருத்துவமனை இயக்குநரான டேனியல்லாவிடம், இது என்ன, ஆட்குறைப்பு நடவடிக்கையா என்று கேட்டால், இல்லை, இரவு பகல் என பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு கண்ட நேரத்துக்கு உணவு சமைத்துக்கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், அதற்கு சரியான ஆட்கள் கிடைக்கமாட்டேன்கிறார்கள், அதனால்தான் இந்த ரோபோவை பயபன்படுத்துகிறோம் என்கிறார்.
இதற்கிடையில், அந்த ரோபோ தயாரிக்கும் உணவை சாப்பிடும் மருத்துவமனை ஊழியர்களும், உணவை ஆகா ஓகோவென புகழ்கிறார்கள்.
ஆக, பணியாளர் தட்டுப்பாட்டுக்கு ரோபோக்கள்தான் தீர்வா என்னும் கேள்வியும் எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |