மனிதனை விட மேலாக மற்ற மனிதர்களின் உணர்வை புரிந்துக்கொள்ளும் டிஜிட்கள்!
அஜிலிட்டி ரோபாட்டிக்ஸ் தனது புதிய இலக்கான டிஜிட் ரோபோட்டை இந்த மாத தொடக்கத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் தலை மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இறுதி உடற்பாகங்களுடன் அது பார்வைக்கு விடப்பட்டது.
5 அடி, 9 அங்குல உயரம் கொண்ட இந்த ரோபோட்டானது கிடங்குகள் மற்றும் பிற தளவாட நடவடிக்கைகளில் மனிதர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனங்களானது மனித ரோபோ தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ரோபோக்களுக்கு ஒரு தலை மற்றும் டிஜிட்டல் முகத்தைச் சேர்ப்பது,ரோபோ என்ன செய்யப் போகிறது என்பதை மனிதர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது.
"ரோபோட்கள் உள்ளுணர்வுடன் இருக்க வேண்டும் என்று மனிதர்கள் உண்மையில் விரும்புகிறார்கள்“ என CTO ஜொனாதன் ஹர்ஸ்ட் ஒரு பிரபல பத்திரிகையிடம் தெரிவித்தார்.
"இந்த ஒளி என்றால் அது, இந்த ஒலி என்றால் இதுதான் என்று மக்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் மொழியின் வெளிப்பாட்டை பயன்படுத்தி ரோபோவிடமிருந்து கருத்தைப் பகிர்ந்து கொள்ள மனிதர்களுக்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டிஜிட்டின் சமீபத்திய அப்டே்டான ரோபோட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அஜிலிட்டி நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனம் இன்னும் இந்த ரோபோட்டின் விலையை முடிவுசெய்யவில்லை, ஆனால் முந்தைய டிஜிட்டின் விலை $250,000 விலையை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கிறது என்று ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
சோஷியல் மீடியாவில் இந்த ரோபோட் தற்போது ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இருக்கிறது.