ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை தரும் கியூட்டி ரோபோ: தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்!
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனநல ஆலோசகரான பயன்படும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களால் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வகை ரோபோ
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்க மனநல ஆலோசகராகப் பயன்படும் வகையில் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோபோக்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றிய ஊழியர்களின் கருத்துக்களை பொறுத்தே அவை பயன்பாட்டுக்கு வருமென விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் "இன்-தி-வைல்ட்" ஆய்வை மேற்கொண்டனர், அங்கு அவர்கள் இரண்டு வெவ்வேறு ரோபோக்களை ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை தரப் பயன்படுத்தினர்.
@Twitter/Nina_HKivaNani
நிறுவனத்தில் உள்ள 26 ஊழியர்கள் வாராந்திர ரோபோ தலைமையிலான நல்வாழ்வு அமர்வுகளில் நான்கு வாரங்களுக்குப் பங்கேற்றுள்ளனர்.
சுவாரஸ்யமாக, ஒரு பொம்மை போன்ற ரோபோவுடன் பேசிய ஊழியர்கள் மனிதனோடு பேசுவதை விட ரோபோவுடன் அதிக நெருக்கத்தை உணர்ந்துள்ளனர்.
க்யூட்டி-மிஸ்டி
க்யூடி என்பது ஒரு மனித உருவ ரோபோ ஆகும், இது கிட்டத்தட்ட குழந்தை போன்றது மற்றும் 90 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகும். மிஸ்டி என்ற 36 சென்டிமீட்டர் அளவுள்ள பொம்மை போன்ற ரோபோ. இரண்டு ரோபோக்களும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெவ்வேறு முகபாவனைகளுடன் திரை முகங்களைக் கொண்டிருந்தன.
@University of Cambridge
இந்த அமர்வுகள் ஒவ்வொன்றிலும் ஊழியர்களிடம் ஒரு நேர்மறையான அனுபவத்தை நினைவுபடுத்தும்படியோ அல்லது தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதையாவது விவரிக்கும்படி ரோபோட் கேட்கும்.
இதற்குப் பிறகு, ரோபோ அவர்களிடம் அந்நிகழ்வு பற்றி வேறு கேள்விகளை எழுப்பி அவர்களை நல்ல மனநிலைக்கு கூட்டிச்செல்லும். அமர்வுகளுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் ஒரு கேள்வித்தாள் மற்றும் நேர்காணலுடன் ரோபோவை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
@University of Cambridge
ஊழியர்கள் பலரும் இது புது வித அனுபவமாக இருந்தது. உண்மையில் நேர்மறை எண்ணங்களை விதைக்கக்கூடிய வகையில் ரோபோக்களின் ஆலோசனை இருந்ததென மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.