தடுப்பூசி போட்ட பின்னர் கடுமையான தலைவலி... பிரபல ராக் இசைக்கலைஞருக்கு ஏற்பட்ட துயரம்
பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல ராக் இசைக்கலைஞர் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
Zion என அறியப்படும் 48 வயதான ராக் இசைக்கலைஞரே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு வாரத்தில் மரணமடைந்துள்ளார்.
மே 19ம் திகதி நியூகேஸில் ராயல் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 8 நாட்களுக்கு பின்னர் மே 13ம் திகதி கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனையை நாடியுள்ளார்.
பாடகரின் மரணம் தடுப்பூசி தொடர்பான சிக்கலினால் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டாலும், முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 24.2 மில்லியன் பேர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 330 பேர்களுக்கு ரத்தக்கட்டிகள், அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் 58 நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.