ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள்: ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்துவந்த பாறைகள், ரயில் பாதைகள் சிலவற்றில் விழுந்துள்ளதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எந்த பகுதியில் பிரச்சினை?
குறிப்பாக, பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிரச்சினையால், குறைந்தபட்சம் வியாழக்கிழமை வரை போக்குவரத்துக்கு இடையூறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணியளவில், 700 கியூபிக் மீற்றர் அளவுக்கு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune, போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்ப பல நாட்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.
photo by Piero CRUCIATTI / AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |