கருக்கலைப்பு தீர்ப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள்: அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுகை!
பெண்களின் கருக்கலைப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நூற்றூக்கணக்கான பெண்கள் இன்று உச்சநீதிமன்றத்தின் முன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 1973ஆம் ஆண்டு ரோ வி. வேட் வழக்கில் கருக்கலைப்பிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றியமைத்து, நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் கருக்கலைப்பை தடைச் செய்யப்படுவதாக அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதனடிப்படையில், அலபாமா, அரிசோனா, ஆர்கன்சாஸ், ஜார்ஜியா, இதாஹோ, அயோவா, கென்டக்கி, லூசியானா, மிச்சிகன், மிசிசிப்பி, மிசோரி, வடக்கு டகோட்டா, ஓஹியோ, ஓக்லஹோமா, தென் கரோலினா, தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ், உட்டா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்ஸ் ஆகிய 22 மாகாணங்களில் கருக்கலைப்பிற்கு தடை விதித்து, கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hundreds of protesters gathered in front of the Supreme Court to condemn the decision to overturn Roe v. Wade. Next to the protesters, anti-abortion activists celebrated the end of the landmark ruling. https://t.co/847J2vGztX pic.twitter.com/phDsKf8UpM
— The New York Times (@nytimes) June 25, 2022
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் உள்ள கருக்கலைப்பு மருத்துவமனைகள் தங்களது சேவைகளை நிறுத்த தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், ரோ வி. வேட் (Roe v Wade)வழக்கு தொடர்பான தீர்ப்பை அடிப்படையாக கொண்டு சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட கருக்கலைப்பு வழிமுறைகளை உச்சநீதிமன்றம் நேற்று மாற்றியதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள், இன்று அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னால் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
After the U.S. Supreme Court overturned the landmark 1973 Roe v. Wade ruling that guaranteed the right to an abortion, Vice President Kamala Harris criticized the decision, calling the moment a ‘health care crisis’ for women https://t.co/uIs67OOYr0 pic.twitter.com/bDY45H40Pl
— Reuters (@Reuters) June 25, 2022
மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள், எங்களின் உடல் எங்களின் உரிமை என்பது போன்ற பாதாகைகளை தாங்கிக் கொண்டு கோசங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுத் தொடர்பாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பை கண்டித்துள்ளார், அத்துடன் இந்த தருணத்தை பெண்களுக்கான சுகாதார நெருக்கடி எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்த அமெரிக்க மாகாணங்களில் இனி கருக்கலைப்பு சட்டவிரோதமாகிவிடும்: வெளியான பட்டியல்
கருக்கலைப்பிற்கு எதிராக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்றத்தின் முன் போராடி வரும் நிலையில், அதே பகுதியில் கருக்கலைப்பிற்கு எதிரான ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடிவருகின்றனர்.